கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் அருகே வெள்ளி மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பெரியசாமி (48) மற்றும் சத்யராஜ் (39) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். பெத்தா சமுத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெரியசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.