வாணாபுரம்: 18 பவுன் திருட்டு.. வீடு திரும்பியதும் அதிர்ச்சி

316பார்த்தது
வாணாபுரம்: 18 பவுன் திருட்டு.. வீடு திரும்பியதும் அதிர்ச்சி
வாணாபுரம் ராவத்தநல்லூரைச் சேர்ந்த ஆயூப்கான் (60) மற்றும் அவரது மனைவி நூா்ஜஹான், கடந்த 6-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நூா்ஜஹான் சேலை சிக்கி கீழே விழுந்து காயமடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, சுமார் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. வடபொன்பரப்பி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி