கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலை அமைப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.