கள்ளக்குறிச்சி: கணவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்

356பார்த்தது
கள்ளக்குறிச்சி: கணவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்
கள்ளக்குறிச்சி அடுத்த க. மாமனந்தலை கிராமத்தைச் சேர்ந்த சையத் முனீர்(29) என்பவர், ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தனது குடும்பத்தை விட்டு சென்னைக்குச் சென்று டிரேடிங் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தாய் வீட்டில் வசித்து வந்த அவரது மனைவி ஹசீனா பேகம், கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி