தியாகதுருகம் வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆத்மா திட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) ரகுராமன் வரவேற்றார். வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் மற்றும் விவசாய அடையாள எண் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தியாகதுருகம் பகுதி விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.