கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் தேய்பிறை பிரதோஷம் இன்று (ஆகஸ்ட் 20) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் மூலவர் அர்த்தநாரீஸ்வரருக்கும், பிரதோஷ நந்தீஸ்வரருக்கும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் பெருமானும், பிரதோஷ விநாயகர் நந்தீஸ்வர பெருமானும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.