வருகிற ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகருக்கு வருகை தரும் அதிமுக பொது செயலாளர், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 126 அடி உயரமுள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றி, சுமார் 5000 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பணிகளை அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு ஆய்வு செய்தார்.