வாணாபுரம் அடுத்த சீர் பாதநல்லூரைச் சேர்ந்த பார்வதி (65) அத்தியூர் சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு அத்தியூர் - தொழுவந்தாங்கல் சாலையில் நடந்து சென்றபோது, அதே திசையில் வந்த தொழுவவந்தாங்கலைச் சேர்ந்த சுதாகர் (30) ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்வதியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.