திருக்கோவிலூர்: கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

138பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி சந்தப்பேட்டை ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கண்கவர் வான வேடிக்கை, மேளதாளம், நாதஸ்வரம் இசைக்க, குழல் ஊதும் கண்ணன் அலங்காரத்தில் கிருஷ்ணர் வீதி உலா வந்தார். உறியடி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாதவ சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி