வாணாபுரம் அடுத்த பெரியகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெங்களூரு ஐடி ஊழியர் கார்த்திக், உறவினர் வீட்டில் துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தபோது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பகண்டை கூற்றோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.