ரிஷிவந்தியம்: பள்ளி கொடிக்கம்பத்தில் பழைய துணி.. மறியல்

276பார்த்தது
ரிஷிவந்தியம்: பள்ளி கொடிக்கம்பத்தில் பழைய துணி.. மறியல்
ரிஷிவந்தியம் வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தேசிய கொடியேற்றும் கம்பத்தில் பழைய துணியால் கொடியேற்றப்பட்டிருந்ததையும், பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோபமடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி