
சங்கராபுரம் அருகே சுற்றித்திரிந்த 10 அடி மலைப்பாம்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் திருமலை என்பவரின் வீட்டின் முன்பாக 10 அடி நீள மலைப்பாம்பு சுற்றித் திரிந்தது. தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் ரவி, பாம்பைப் பிடிக்கும்போது அது கையில் சுற்றிக் கொண்டது. பின்னர், பாம்பை சாக்குப்பையில் அடைத்து காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


























