கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் வடசேமபாளையம் விஷ்ணு (4), காட்டுவனஞ்சூர் குப்பாயி (50), மூக்கனுார் கார்த்திகா (11), அ. பாண்டலம் கவுதம் (30), கிடங்கன்பாண்டலம் தமிழரசன் (12), எஸ். வி. பாளையம் அசோதை (57), கிடங்குடையான்பட்டு பெரியம்மா (65), வடசெட்டியந்தல் பாவாடை (52), கொசப்பாடி சுரேஷ் (40), சங்கராபுரம் நஸ்மா (28), விரியூர் மரிய ஜோசப் (44), மஞ்சபுத்துார் பெரியநாயகம் (55), செல்லம்பட்டு முருகன் (60), வரகூர் ஆரோக்கியராஜ் (33) ஆகியோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனே காணப்படுகின்றனர்.