உளுந்தூர்பேட்டை லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் காயம்

183பார்த்தது
உளுந்தூர்பேட்டை லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் காயம்
நேற்று நவம்பர் 16 அன்று, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மதுராந்தகத்தைச் சேர்ந்த 8 பேர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே ஷேக் ஹூசைன் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் காயமடைந்தனர். எடைக்கல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி