உளுந்தூர்பேட்டை சிப்காட் வளாகத்தில் புதிய காலணி உற்பத்தி ஆலை விரைவில் செயல்பட உள்ளது. இதில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான மத்திய காலணி தொழில் கல்வி சேர்க்கைக்கு 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த, 35 வயதிற்குட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9677943733, 9677943633 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.