சங்கராபுரம்: வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு மீட்பு

390பார்த்தது
சங்கராபுரம்: வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு மீட்பு
சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையத்தில் பிப்ரவரி 19 அன்று அஷ்ரப் என்பவரின் வீட்டிற்குள் ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்த நிலையில், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நாகப்பாம்பை பத்திரமாகப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.