சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியை முற்றுகையிட கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த முற்றுகையைத் தடுக்க காவல்துறை இந்தியன் வங்கி முன்பு குவிக்கப்பட்டது. இதனால், முற்றுகையிட வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.