சங்கராபுரம் அடுத்த செம்பரம்பட்டு கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட செப்டிக் டேங்க் பள்ளத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்புப் படையினர் பரமசிவம் தலைமையில் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.