கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சின்னசேலம் ஒன்றிய துணைத் தலைவர் அன்புமணி மாறன், சின்னசேலம் நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சியினர், விடுதலைச் சிறுத்தை கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.