உளுந்தூர்பேட்டை அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (72), கடந்த 18ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்குச் சென்றபோது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவரின் உடலை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.