கள்ளக்குறிச்சி: குறைகேட்பு கூட்டம்.. 408 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 408 மனுக்கள் பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் வருவாய்த் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 408 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.