கல்வராயன்மலை: விவசாயிகளுக்கு வேளாண் சிறுதளை வழங்கும் விழா

62பார்த்தது
கல்வராயன்மலை: விவசாயிகளுக்கு வேளாண் சிறுதளை வழங்கும் விழா
கல்வராயன்மலை ஒன்றியம், சேராப்பட்டு பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் சிறுதளை வழங்கும் விழா நடந்தது. சங்கராபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். 

வேங்கோடு பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் அலமேலு, சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண் அலுவலர் முருகேசன் வரவேற்றார். அரசு மூலம் மலைவாழ் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ் வன உரிமை சட்டத்தின்படி பட்டா பெற்றுள்ள விவசாயிகள் 500 பேர்களுக்கு உளுந்து சிறுதளைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் சேராப்பட்டு குப்புசாமி, கிளாக்காடு செல்வம், வஞ்சிக்குழி சின்னக்கண்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் வல்லரசு, ராகவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். உதவி வேளாண் அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி