சங்கராபுரம் தலைமை காவலர் நெடுமானூர் ஏரிக்கரை செம்பியம்மன் கோவிலில் ரோந்து சென்றபோது, உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த அய்யப்பன் என்பவரைப் பிடித்தார். அவரிடமிருந்து உலி, கம்பி, கிளவுஸ் மற்றும் ரூ. 432 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அய்யப்பன் அதே பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.