மூன்று பெண்களிடம் செயின் பறித்த ஆசாமி கைது

1பார்த்தது
மூன்று பெண்களிடம் செயின் பறித்த ஆசாமி கைது
சங்கராபுரம் பகுதியில் ஜனவரி 10 அன்று இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற முருகன் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், 3 பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் 20 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. சங்கராபுரம் போலீசார் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி