குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷ பாம்புகள்

349பார்த்தது
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷ பாம்புகள்
சங்கராபுரம் வள்ளலார் கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் நேற்று பிப்ரவரி 16 மதியம் கட்டுவிரியன் மற்றும் நாகப்பாம்பு திடீரென வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்புப் படை வீரர்கள், பதுங்கியிருந்த பாம்புகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். குடியிருப்புப் பகுதியில் நச்சுப் பாம்புகளின் நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you