சங்கராபுரம் அடுத்த பூட்டை ஊராட்சி பாவலன் கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அன்றாட தேவைகளுக்கு குடிநீர் கிடைக்காததால் வயதானவர்களும் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அல்லல் படுகின்றனர். இதனால் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.