கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராம காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் நிறுத்துவதற்கு தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தைக் கேட்டு, நவம்பர் 25 அன்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.