ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த 30 பெண்கள் கொண்ட குழுவினர், போதை ஒழிப்பு மற்றும் ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கார் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி, சேலம், எடப்பாடி, காவேரிப்பட்டினம் ஆகிய ஊர்களை கடந்து கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் வந்த குழுவினரை, சங்கராபுரம் ரோட்டரி கிளப் தலைவர் மணிவண்ணன் மற்றும் இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி செல்வமணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்து கௌரவித்தனர்.