சங்கராபுரம்: குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

82பார்த்தது
சங்கராபுரம்: குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
சங்கராபுரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார். சங்கராபுரம், பங்களா தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் வல்லரசு (25). இவரை, கடந்த பிப். , 13 ம் தேதி போலீசார் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வல்லரசுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள வல்லரசுவிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி