
திருநாவலூரில்பெட்ரோல் பங்க் ஊழியரிடம்பணம் பறித்த இருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மடப்பட்டு பெட்ரோல் பங்கில் நவம்பர் 24ஆம் தேதி ஊழியரிடம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். பங்க் ஊழியர் ஐயப்பன் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் கடலூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்தனர்.























