பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏரியில் அரசு அனுமதி இன்றி இரவு நேரத்தில் மண் அள்ளியதாக மூவர் கைது செய்யப்பட்டனர். வட பொன் பரப்பி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பழனிவேல் (30) மற்றும் அன்பழகன், அசோக் (30) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.