சின்ன சேலம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த வைக்கோல் வியாபாரி மணிகண்டன் (29) தனது உறவினருடன் நயினார் பாளையம் சாலையில் வைக்கோல் வாங்கச் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். இதில் மணிகண்டனும் அவரது உறவினரும் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.