கார் மோதி மூதாட்டி பலி

0பார்த்தது
கார் மோதி மூதாட்டி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அசோதை (60) என்பவர், தனது ஊரைச் சேர்ந்தவர்களுடன் பிப்ரவரி 3 மாலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாகச் சென்றுகொண்டிருந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.