உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

0பார்த்தது
பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெரிசலைக் குறைக்கும் வகையில், தென் மாவட்ட வாகனங்கள் செல்லும் திசையில் எதிர் வழித்தடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.