கள்ளக்குறிச்சி அருகே சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேர்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளுந்துார்பேட்டை போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை, பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் பச்சமுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து பச்சமுத்துவை கைது செய்தனர்.