தியாகதுருவம் அரசு ஆண்கள் பள்ளியில் விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் 10 முதல் 17 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான உடல் தகுதி தேர்வு இன்று (மே 7) மற்றும் நாளை (மே 8) நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ் நகல், விளையாட்டுச் சான்றிதழ் நகல் மற்றும் பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணத்துடன் வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.