தியாகதுருகம் அருகே நிறைமாத கர்ப்பிணி நிலாவுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றபோது, ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஓட்டுநர் விக்னேஷ் ஆகியோர் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்தனர். இதில் 3.2 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவையை மருத்துவர்கள் பாராட்டினர்.