தியாகதுருவம் நகை பணம் திருட்டு

1பார்த்தது
தியாகதுருவம் நகை பணம் திருட்டு
தியாகதுருவம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (40) என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது மாடூருக்கு வந்து செல்வது வழக்கம். மார்ச் 1 அன்று, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டு சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருவம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி