கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (45) என்பவர், மாம்பாக்கம் குறுக்குச் சாலையில் உள்ள ஒரு கடையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.