உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூரில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் களமருதுார் சப் இன்ஸ்பெக்டர் சலாம்உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கிளியூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (41) என்பவரை மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து களமருதுார் போலீசார் வழக்குப்பதிந்து மகேஸ்வரியை கைது செய்தனர்.