உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ. குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருணா (32), கடந்த இரண்டு வருடங்களாக வயிறு மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி தாங்க முடியாததால், நேற்று பிப்ரவரி 8 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருணாவின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.