கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படாததை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தாலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.