சின்னசேலம்: மாடு திருடிய இளைஞர் கைது

61பார்த்தது
சின்னசேலம்: மாடு திருடிய இளைஞர் கைது
சின்னசேலம் பெருமாள் கோவில் சாலையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது குத்தகை நிலத்தில் வளர்த்து வந்த பசு மாடு திடீரென காணாமல் போனது. தேடிச் சென்றபோது, கோ. சுரேஷ் என்பவரின் வீட்டின் முன்பு பசு மாடு கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அதே வீட்டில் இருந்த மொபெட்டை பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் திருடியதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி