காமராஜர் மக்கள் கட்சியை ஜி.கே.வாசன் தலைமையிலான தாமாகாவுடன் தமிழருவி மணியன் இன்று (நவ., 25) இணைத்தார். மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான தமிழருவி மணியன் தனது தலைமையில் இயங்கிவந்த காமகவை கலைத்துவிட்டு அரசியல் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இன்றே கட்சியை மற்றொரு கட்சியுடன் இணைந்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் வாசன் வலியுறுத்தினால் போட்டியிடுவது குறித்து பரீசிலனை செய்வேன் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.