தனது பெயர், படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு

17பார்த்தது
தனது பெயர், படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு
வர்த்தக ரீதியில் தனது பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த தடை கோரி நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உலக நாயகன் என்ற பட்டம் மற்றும் தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி சென்னையில் உள்ள ‘நீயே விடை’ (Neeye Vidai) என்ற நிறுவனம் பயன்படுத்துவதாக கூறி கமல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நாளை (ஜன., 12) விசாரிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்படுமா என்பது நாளை தெரியவரும்.

தொடர்புடைய செய்தி