காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமானதாகவும், வெள்ளி மற்றும் தங்க பல்லி சிலைகளை மாற்ற கோயில் நிர்வாகம் முயற்சிப்பதாகவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், இந்த புகார் முற்றிலும் பொய்யானது என்றும், இதுகுறித்து புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.