காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய தவெக வேட்பாளர்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய தவெக வேட்பாளர்

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆர்.வீ.ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது, 'மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடர்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்' என்று சத்தியம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

வீடியோஸ்


தமிழ் நாடு