பூந்தமல்லி அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முகேஷ் கலைச்செல்வம் (24) தனது நண்பர்களுடன் ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் சாப்பிட்டபோது, பிரியாணியில் இறந்த கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கேட்டபோது பணியாளர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியாணியை பரிசோதனை செய்துவிட்டு கடையை மூட உத்தரவிட்டனர்.