
செங்கல்பட்டு: வாகனம் மோதி.. கூலித்தொழிலாளி பலி
செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் அருகே சாலை ஓரம் நடந்து சென்ற கட்டுமான கூலித்தொழிலாளி பார்த்திபன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








































