காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரம், வேலாத்தம்மன் கோவில் தெருவில், புதிதாக அத்திவாராஹி கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்றுமுன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகபூஜை துவங்கியது. நேற்று, காலை 6:30 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு கடம்புறப்பாடும், 10:15 மணிக்கு, அருள்சித்தர் அகஸ்தியர் அன்புசெல்வன் முன்னிலையில், வேதவிற்பன்னர்கள், கோவில் கோபுரவிமானகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து வாராஹி மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும், மஹாதீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.